பிரதமர் மோடிக்கு கரும்பு, வாழை தோரண வரவேற்பு | NDA Public Meeting | PM Modi | | Election 2026
பிரதமர் மோடிக்கு கரும்பு, வாழை தோரண வரவேற்பு | NDA Public Meeting | PM Modi | | Election 2026 | Trichy திருச்சி பஞ்சப்பூரில் இன்று மாலை நடைபெறும் அரசு விழா மற்றும் தேசிய ஜனநாயக கூட்டணி பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்கிறார். அப்போது 5,650 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டப் பணிகளை நாட்டுக்கு அர்ப்பணித்தும், புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டவும் உள்ளார். தேசிய ஜனநாயக கூட்டணி பொதுக் கூட்டத்தில் 7 லட்சம் பேர் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. அவர்களுக்கு சிற்றுண்டி வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பிரதமர் வருகையொட்டி திருச்சி மாநகரம் விழாக்கோலம் பூண்டுள்ளது. 3600 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் ஒவ்வொரு முறையும் பிரதமர் வரும்போது தமிழகத்திற்கு பல ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்களை அறிவித்தும், முடிவுற்ற திட்டங்களை திறந்து வைத்து மக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்துகிறார். மத்தியில் நல்லாட்சி வழங்குவது போல தமிழகத்திலும் நல்லாட்சி வழங்க வித்திடும் பிரதமரை வரவேற்க திருச்சி மக்கள் எழுச்சியுடன் காத்திருக்கின்றனர். பொதுக்கூட்டம் மேடை அருகே பிரதமரை வரவேற்க வாழை மற்றும் கரும்பு தோரணம் அமைக்கப்பட்டுள்ளது. ட்ரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. நடமாடும் சிசிடிவி கண்காணிப்பு கேமிரா வாகனம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மெட்டல் டிடெக்டர் மூலம் போலீசார் வரவேற்பு தோரணங்கள், தரைப் பகுதிகளில் சோதனை செய்து வருகின்றனர்.