நேரில் சென்று வாழ்த்திய தவெக எம்.எல்.ஏ. விஜயகுமார் | NEET Exam | Thiruverumbur MLA Vijayakumar
நேரில் சென்று வாழ்த்திய தவெக எம்.எல்.ஏ. விஜயகுமார் | NEET Exam | Thiruverumbur MLA Vijayakumar | Congratulate the students | Govt Model School | Thuvakkudi | Trichy திருச்சி மாவட்டம், திருவெறும்பூர் அருகே துவாக்குடியில் உள்ள அரசு பாலிடெக்னிக் கல்லுாரி வளாகத்தில் அரசு மாடர்ன் பள்ளி செயல்பட்டு வருகிறது. அரசு பள்ளிகளில், 8ம் வகுப்பு வரை பயின்ற மாணவர்களில் தகுதி உள்ளவர்களை தேர்வு செய்து, இந்த பள்ளியில் சேர்த்து, 9ம் வகுப்பு முதல் ப்ளஸ் 2 வகுப்பு வரை படிக்க வைக்கின்றனர். மாணவ, மாணவியரை தனித்தனியாக விடுதிகளில் தங்க வைத்து, தனியார் பள்ளிகளுக்கு நிகரான போட்டித் தேர்வு மற்றும் நீட் தேர்வு பயிற்சிகள் வழங்கப்படுகிறது. கடந்த ஆண்டு கல்வி ஆண்டில், இந்த பள்ளியில் ப்ளஸ் 2 பயின்ற 34 மாணவியரும், 40 மாணவர்களும் நீட் தேர்வு எழுதியதில், 32 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். ஏற்கனவே, இங்கு பயின்ற 15 பேர், என்.ஐ.டி., மற்றும் மத்திய சட்டப் பல்கலையில் சேர்ந்துள்ளனர். தற்போது, நீட் தேர்வு எழுதியவர்களில் நான்கு பேர் அகில இந்திய அளவிலான ரேங் பட்டியலில் இடம் பிடித்துள்ளனர். 28 பேர் தமிழக அரசின் 7.5 சதவீதம் இட ஒதுக்கீட்டில் இடம் பெற்றுள்ளனர். இன்று திருவெறும்பூர் எம்.எல்.ஏ., விஜயகுமார், அரசு மாடர்ன் பள்ளிக்கு சென்றார். நீட் தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு தெரிவித்தார். மேலும் பள்ளி கட்டிடத்தையும், விடுதியில் வழங்கப்படும் உணவின் தரம் குறித்தும், ஆய்வு செய்தார்.