உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / திருச்சி / போலீஸ் சீருடையில் மாஜி போலீஸ் அட்டகாசம் brawl at petrol bunk in police uniform

போலீஸ் சீருடையில் மாஜி போலீஸ் அட்டகாசம் brawl at petrol bunk in police uniform

திருச்சி மாவட்டம் தொட்டியம் யூனியன் ஆபீஸ் முன் பெட்ரோல் பங்க் உள்ளது. இங்கு போலீஸ் சீருடையில் டூவீலரில் வந்தவர் 200 ரூபாய்க்கு பெட்ரோல் நிரப்பினார். பணம் கேட்ட பம்ப் ஆப்ரேட்டர்கள் சரவணன், கனகநாதன் ஆகியோரிடம் போலீசிடமே பணம் கேட்கிறாராயா எனக்கேட்டு தகராறில் ஈடுபட்டு இருவரையும் தாக்கினார். அவர் மீது சந்தேகமடைந்த பம்ப் ஆப்ரேட்டர்கள் போலீசாருக்கு தகவல் கூறினார். ஸ்பாட்டிற்கு வந்த போலீசார் விசாரணை நடத்தினர். போலீஸ் சீருடையில் இருந்த ஆசாமி டிஸ்மிஸ் செய்யப்பட்ட முன்னாள் போலீஸ்காரர் மணிகண்டன் வயது 45 என தெரியவந்தது. மணிகண்டன் போலீஸ் சீருடையில் டூவீலரில் வலம் வந்து மாமூல் வசூலில் ஈடுபட்டது தெரியவந்தது. அவரை கைது செய்து போலீசார் விசாரிக்கின்றனர்.

செப் 13, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை