டூர் வந்த மலேசிய தமிழர்கள் 10 பேர் படுகாயம் | Car - van Accident | 4 Death | Devakottai
மலேசியாவில் இருந்து அங்கு வசிக்கும் தமிழர்கள் 10 பேர் ராமேஸ்வரத்துக்கு ஆன்மிக சுற்றுலா வந்தனர். அங்கிருந்து டெம்போ வேனில் திருச்சி ஸ்ரீரங்கம் சென்று கொண்டிருந்தனர். தேவகோட்டை மார்க்கண்டேயன்பட்டி ஆற்றுப் பாலம் அருகே வளைவில் திரும்பும்போது எதிரே வந்த காரும் டெம்போவும் நேருக்கு நேர் மோதியது. இதில் காரில் வந்த 2 சிறுமிகள் உட்பட 4 பேர் அதே இடத்தில் இறந்தனர். டெம்போ வேனில் வந்த 10 மலேசிய தமிழர்களும் காயம் அடைந்தனர். கிராம மக்கள் அவர்களை மீட்டு தேவகோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்தில் இறந்தது தஞ்சாவூர் காந்தி நகரை சேர்ந்த டீக்கடைக்காரர் பவுல் டேனியல், அவரது 10 வயது மகள் சூசன்ரெகுமா, 7 வயது மகள் ஹெலன் சாமா, டேனியலின் 63 வயது சித்தப்பா மைக்கேல் என்பது தெரிந்தது. உறவினர் விசேஷத்துக்காக காரில் தேவகோட்டை அருகேயுள்ள ஆண்டாஊரணிக்கு சென்றது முதல்கட்ட விசாரணையில் தெரிய வந்தது. தேவகோட்டை தாலுகா போலீசார் விசாரிக்கின்றனர்.