உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / திருச்சி / கோவிட் காலத்தில் நடப்பட்ட மரக்கன்றுகள் சோலையானது | Trichy | Birthday party for trees

கோவிட் காலத்தில் நடப்பட்ட மரக்கன்றுகள் சோலையானது | Trichy | Birthday party for trees

கடந்த 2019 ம் ஆண்டு இறுதியில் கோவிட் தொற்று கோரத்தாண்டவம் ஆடத் துவங்கியது. ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்பட்ட காரணத்தால் பல உயிர்கள் பலியாகின. மரங்கள் இல்லையே உயிரினம் இல்லை என்பதை சரியாக புரிந்து கொண்டு திருச்சி மாவட்டம் மணப்பாறை பொய்கைப்பட்டி ஊராட்சி புதுப்பட்டி கிராம மக்கள் ஒருங்கிணைந்து மரக்கன்றுகளை 2020ம் ஆண்டு துவக்கத்தில் இருந்து நட்டு முறையாக பராமரித்து வருகின்றனர். இவர்கள் 2020ம் ஆண்டு முதல் மணப்பாறை புதுப்பட்டி, கீழபொய்கைப்பட்டி, நாயன்மார்கோவில், ரெங்ககவுண்டம்பட்டி உள்ளிட்ட பல பகுதிகளில் பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட பல வகையான மரக்கன்றுகள் நடப்பட்டது. மரக்கன்றுகள் நடப்பட்டு நான்கு ஆண்டுகளில் பசுமை போர்வை போர்த்திய போல் சோலை வனமாக கிராமங்கள் மிடுக்காக காட்சியளிக்கின்றன.

அக் 20, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை