உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / திருச்சி / திரளான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் | Trichy | Samayapuram Mariamman Temple | Maha Navashandi Homam

திரளான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் | Trichy | Samayapuram Mariamman Temple | Maha Navashandi Homam

திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோயிலில் கும்பாபிஷேகம் முடிந்து 8 ஆண்டுகள் நிறைவு பெற்றதை தொடர்ந்து சிறப்பு நவசண்டி ஹோமம் நடைபெற்றது. இதையொட்டி மூலவர் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபாராதனைகள் நடைபெற்றன. தொடர்ந்து உற்சவர் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்து தீபாராதனைகள் நடைபெற்றன. கோயில் தங்கக்கொடி மரம் அருகே விக்னேஷவர பூஜை உள்ளிட்ட சிறப்பு பூஜைகளை தொடர்ந்து மகா நவசண்டி ஹோமம் நடைபெற்றது. திரளான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர்.

ஜன 20, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ