உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / திருச்சி / பிரக்யான் தொழில்நுட்ப விழா திருச்சி NITயில் துவங்குகிறது

பிரக்யான் தொழில்நுட்ப விழா திருச்சி NITயில் துவங்குகிறது

திருச்சி தேசிய தொழில்நுட்பக் கழகத்தில் (என்ஐடி) பிரக்யான் 2024 (pragyan)என்ற தலைப்பில் தொழில்நுட்ப விழா பிப்ரவரி 22 ம் தேதி முதல் 25ஆம் தேதி வரை நடக்கிறது. இதுகுறித்து திருச்சி என்.ஐ.டி. இயக்குநர் அகிலா செய்தியாளர்களிடம் கூறுகையில், திருச்சி என்ஐடி சார்பாக தேசிய அளவில் ஆண்டுதோறும் மாணவர்களின் படைப்பாற்றலை வெளிக்கொண்டு வரும் வகையில் பிரக்யான் தொழில்நுட்ப விழா நடத்தப்பட்டு வருகிறது. இந்தாண்டு விழா பிப்ரவரி 22 ம் தேதி முதல் 25 ஆம் தேதி வரை 4 நாள்கள் நடக்கிறது. இதனை எல் அன்ட் டி (L&T) ஏவுகணை தொழில் பிரிவின் தலைவர் லக்ஷ்மேஷ் தொடங்கி வைக்கிறார். விழாவில் பிரக்யான் தொழில்நுட்பக் கண்காட்சி மற்றும் கலை நிகழ்ச்சிகள் இடம் பெற்றுள்ளன. விழாவில் தேசிய மற்றும் சர்வதேச அளவில் 3,000 மாணவர்கள் நேரடியாகவும், இணையதளம் வழியாக சுமார் 10,000 மாணவர்களும் பங்கேற்க உள்ளனர். பள்ளி, கல்லூரி மாணவர்கள் உள்பட அனைவருக்கும் பங்கேற்கலாம். அனுமதி இலவசம் என்றார்.

பிப் 21, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை