3000 பேருக்கு வேஷ்டி, சேலை, கரும்பு, புத்தகம் | Pongal festival
திருச்சி தில்லைநகர் சாஸ்திரி சாலையில் உள்ள அமைச்சர் நேரு அலுவலகத்தில் சமத்துவ பொங்கல் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. இவ்விழா மயிலாட்டம், ஒயிலாட்டம், செண்டை மேளம், தாரை தப்பட்டை மற்றும் பேண்ட் வாத்தியங்கள் என களைகட்டியது. பாரம்பரிய உடையில் அமைச்சர் நேரு மற்றும் கலெக்டர் பிரதீப் குமார் சமத்துவ பொங்கல் வைத்து கொண்டாடினர். முன்னதாக அமைச்சர் மகேஷ் அமைச்சர் நேருவை சந்தித்து வாழ்த்து பெற்றார். 3,000 பேருக்கு வேஷ்டி சேலை, கரும்பு மற்றும் கலைஞரின் கடிதங்கள் என்ற புத்தகம் வழங்கப்பட்டது. விழாவில் மாநகராட்சி கமிஷனர் வைத்திநாதன், மேயர் அன்பழகன் ஏராளமான திமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
ஜன 15, 2024