ஏப்ரல் 11ல் நம் பெருமாள் தாயார் சேர்த்தி சேவை மற்றும் ஏப்ரல் 12ல் தேரோட்டம்
ஏப்ரல் 11ல் நம் பெருமாள் தாயார் சேர்த்தி சேவை மற்றும் ஏப்ரல் 12ல் தேரோட்டம் / Trichy / Ranganatha Temple / Panguni Festival Flag Hoisting திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் சுவாமி கோயிலில் பங்குனி தேர்த் திருவிழா உற்சவம் அதிகாலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. நம்பெருமாள் மூலஸ்தானத்தில் இருந்து புறப்பட்டு கொடியேற்றம் மண்டபத்தில் எழுந்தருளினார். கொடிக்கு பூஜைகள் செய்து மீன லக்னத்தில் கொடியேற்றம் நடைபெற்றது. விழாவையொட்டி தினமும் காலை, மாலை வேளைகளில் நம்பெருமாள் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதி உலா புறப்பாடு நடைபெறும். முக்கிய நிகழ்ச்சியான ஏப்ரல் 8 ம் தேதி நம்பெருமாள் உறையூர் கமலவல்லிநாச்சியார் சேர்த்தி சேவை, ஏப்ரல் 11ம் தேதி ரெங்க நாச்சியார் தாயார் சேர்த்தி சேவை மற்றும் ஏப்ரல் 12ம் தேதி பங்குனி தேரோட்டம் நடைபெறும். விழா ஏற்பாடுகளை கோயில் இணை கமிஷனர் சிவராம் குமார், அர்ச்சகர்கள் மற்றும் கோயில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.