சேற்றுக்குளியல், மழைச்சாரல் குளியல் போடும் யானைகள் | Roaring Elephants | Elephants Camp
சேற்றுக்குளியல், மழைச்சாரல் குளியல் போடும் யானைகள் | Roaring Elephants | Elephants Camp | M.R. Palayam திருச்சி வனக்கோட்டத்திற்கு உட்பட்ட எம்.ஆர். பாளையம் காப்பு காட்டில் யானைகள் மீட்பு மற்றும் மறுவாழ்வு மையம் கடந்த 2019ம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது. சட்ட விரோதமாக, லைசென்ஸ் பெறாமல் தனியாரால் வளர்க்கப்படும் யானைகள் மற்றும் பராமரிப்பு இல்லாத யானைகளுக்கு மறு வாழ்வு அளிக்கும் வகையில் 50 ஏக்கரில் எம்.ஆர்.பாளையம் மறுவாழ்வு மையம் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு கொண்டு வரப்படும் யானைகள் முறையாக பராமரிக்கப்பட்டு சத்தான உணவு வழங்கப்பட்டு வருகிறது. தற்போது இந்து, சந்தியா, ஜெயந்தி மல்லாச்சி, கோமதி, ஜமிலா, இந்திரா, சுமதி, கிரதி, சுந்தரி உட்பட 11 யானைகள் இங்கு பராமரிக்கப்பட்டு வரப்படுகிறது. தமிழக வனத்துறை சார்பில் யானைகள் பராமரிப்புக்கு தேவையான வசதிகள் செய்து கொடுக்கப்பட்டு கால்நடை மருத்துவர்கள் அறிவுரைப்படி உணவு முறைகள் கடைபிடிக்கப்படுகிறது. கோடை காலத்தில் நீர் சத்து அதிகம் உள்ள முலாம்பழம், தர்பூசணி போன்ற பழங்கள் வழங்கப்படுகின்றன. வழக்கமாக தினமும் காலையில் நீச்சல் மற்றும் நடைப்பயிற்சி அளிக்கப்படுகிறது. சேற்றுக்குளியல், தண்ணீர் தொட்டி குளியல் மற்றும் ஷவர் குளியல் போட்டு யானைகள் குதுாகலிக்கின்றன. கோடையில், வெப்பத்தின் தாக்கம் அதிகமாக இருப்பதால் யானைகளை குளிர்ச்சியான சூழலில் வைத்திருக்க, ஷவர் போன்ற அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது.