உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / திருச்சி / ஏப்ரல் 15ம் தேதி தேரோட்டம் | Mariamman Temple Chitrai utsav kodiyetram| Samayapuram| Trichy

ஏப்ரல் 15ம் தேதி தேரோட்டம் | Mariamman Temple Chitrai utsav kodiyetram| Samayapuram| Trichy

ஏப்ரல் 15ம் தேதி தேரோட்டம் / Mariamman Temple Chitrai utsav kodiyetram/ Samayapuram/ Trichy உலக நன்மை வேண்டி சமயபுரம் மாரியம்மன் பச்சை பட்டினி விரதம் இருந்து வருகிறார். 28 விரத நாட்களில் அம்மனுக்கு தளிகை இல்லாத நெய்வேத்தியம், பானகம், நீர்மோர், இளநீர், துள்ளு மாவு மட்டுமே படைக்கப்படும். இதன் ஒரு பகுதியாக சித்திரை திருவிழா கொடியேற்றம் இன்று வெகு விமர்சையாக நடைபெற்றது. தொடர்ந்து உற்சவர் மாரியம்மன் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினார். கொடி மரத்திற்கு பால், தயிர், இளநீர், சந்தனம் உள்ளிட்ட 16 வகை வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. வேத மந்திரம் முழங்க அம்மன் உருவம் பொறித்த கொடிப்பட்டம் தங்கக் கொடி மரத்தில் ஏற்றப்பட்டது. விழாவையொட்டி தினமும் பல்வேறு வாகனங்களில் அம்மன் வீதி உலா நடைபெறும். விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் ஏப்ரல் 15ம் தேதி காலை நடைபெறும். ஏற்பாடுகளை கோயில் அறங்காவலர் குழுவினர் மற்றும் இணை கமிஷனர் செய்தனர்.

ஏப் 06, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை