உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / திருச்சி / திருச்சியில் தனியார் பேக்கரி அன்ட் ஸ்வீட்ஸ் கடையில் அறிமுகம் | Sevalai Mysorebha | Trichy

திருச்சியில் தனியார் பேக்கரி அன்ட் ஸ்வீட்ஸ் கடையில் அறிமுகம் | Sevalai Mysorebha | Trichy

ஹிந்துக்கள் கொண்டாடும் பண்டிகைகளில் முக்கியமானது தீபாவளி. இந்தாண்டு தீபாவளி அக்டோபர் 31ம் தேதி உலகம் முழுவதும் கொண்டாடப்பட உள்ளது, தீபாவளி பர்சேஸ் களைகட்டி வருகிறது. புத்தாடை, பட்டாசு, ஸ்வீட், காரம் வாங்கி வருகின்றனர். இந்த வகையில் வாடிக்கையாளர்கள் மற்றும் பொதுமக்களின் தேவையை பூர்த்தி செய்யும் நோக்கில் திருச்சியில் தனியார் பேக்கரி அன்ட் ஸ்வீட்ஸ் கடையில் தீபாவளி பலகாரங்கள் தயாரிப்பு பணியில் நுாற்றுக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இந்தாண்டு ஸ்பெஷல் அயிட்டமாக செவ்வாழை மைசூர் பா அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. தவிர மோதி லட்டு, திருப்பதி லட்டு, மோமோஸ், குலாப் ஜாமூன், நெய் மைசூர் பா, சந்திரகலா, சூரிய கலா, ஜாங்கிரி, அல்வா, அதிரசம், பால்கோவா, மிக்சர், மில்க் ஸ்வீட், ட்ரை ஃப்ரூட்ஸ் ஸ்வீட் என நெய்மணம் கமழும் இனிப்பு வகைகள் மற்றும் கார வகைகளை சுத்தமாகவும், சுகாதாரமாகவும் தயாரித்து வருகின்றனர். இந்தாண்டு இரண்டரை டன்னுக்கு மேல் ஆர்டர்கள் குவிந்துள்ளதால் தொழிலாளர்கள் மகிழ்ச்சியடைந்தனர். பலகாரம் தயாரிப்பு பணியில் ஒற்றுமையுடன் வேலைபார்த்து வருகின்றனர். இங்கு 350 ரூபாய் முதல் இந்த இனிப்பு மற்றும் கார வகைகள் அடங்கிய கிப்ட் பாக்ஸ் செட் எல்லோரும் வாங்குவதற்கு ஏற்ற வகையில் கிடைக்கிறது. பட்டாசு வெடித்து, மத்தாப்பு கொளுத்தி, விதவிதமாக இனிப்பு வகைகளை சுவைத்து, இன்பம் நிறைந்து இந்த தீபாவளியை கொண்டாட தயாராகிவருகின்றனர் திருச்சி மக்கள்.

அக் 25, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ