/ மாவட்ட செய்திகள்
/ திருச்சி
/ வெற்றி பெறும் வீரர், வீராங்கனைகளுக்கு உடனடி பரிசுகள் | State Leval Silambam Tournament
வெற்றி பெறும் வீரர், வீராங்கனைகளுக்கு உடனடி பரிசுகள் | State Leval Silambam Tournament
உலக சிலம்ப இளையோர் சங்கம் சார்பில் திருச்சி தில்லைநகர் தனியார் பள்ளியில் மாநில சிலம்பம் போட்டி நடைபெற்றது. இதில் 19 மாவட்டங்களில் இருந்து 750க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர். குத்துவரிசை, நெடுங்கம்பு, நடுக்கம்பு வீச்சு, இரட்டைக் கம்பு, தொடு சிலம்பம் என பல்வேறு பிரிவுகளில் போட்டிகள் நடத்தப்பட்டன. வீரர்களின் ஒழுக்கம், வேகம், ஸ்டைல், ஆற்றல் உள்ளிட்டவைகளை கணக்கில் கொண்டு அதன் அடிப்படையில் மதிப்பெண் வழங்கப்பட்டன. ஒவ்வொரு பிரிவுகளிலும் வெற்றி பெறும் வீரர், வீராங்கனைகளுக்கு சான்றிதழ் மற்றும் கோப்பைகள் உடனுக்குடன் வழங்கப்பட்டன. இப்போட்டியை ஏராளமானோர் கண்டு ரசித்தனர்.
பிப் 11, 2024