உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / திருச்சி / தத்ரூபமாகநடந்த ஒத்திகைபயிற்சி|Train accident |Passengers rescue |Safety drill |Southern Railway

தத்ரூபமாகநடந்த ஒத்திகைபயிற்சி|Train accident |Passengers rescue |Safety drill |Southern Railway

தத்ரூபமாக நடந்த ஒத்திகை பயிற்சி | Train accident | Passengers rescue | Safety drill | Southern Railway | Trichy திருச்சி குட்செட் ரயில்வே பணிமனையில் தெற்கு ரயில்வே சாா்பில் பேரிடா் கால மீட்பு நடவடிக்கை ஒத்திகை பயிற்சி மேற்கொள்ளப்பட்டது. இந்த ஒத்திகை பயிற்சியில் ரயில்வே பாதுகாப்பு பிரிவு, ரயில்வே பாதுகாப்பு படை, தேசிய பேரிடா் மீட்புப் படை, தமிழ்நாடு பேரிடா் மீட்புப் படை மற்றும் பெருநகரப் பேரிடா் மீட்புப் படையை சோ்ந்த 400 போ் கலந்து கொண்டனா். காலை 9 மணி முதல் மதியம் 12 மணி வரை சுமார் 3- மணி நேரம் நடைபெற்ற இந்த பயிற்சிக்காக ரயில் விபத்து நடைபெற்றது போன்று பெட்டிகள் அமைக்கப்பட்டன. அதைத் தொடர்ந்து மருத்துவா்கள், மருத்துவப் பணியாளா்கள், மீட்பு பணியாளா்கள், பொறியாளா்கள் உள்ளிட்டோா் பயணிகளை மீட்கும் அவசர கருவிகளுடன் நிவாரண பணியில் ஈடுபடுவது போன்று ஒத்திகை நடந்தது. இதன் மூலம் விபத்து காலங்களில் குறைந்த நேரத்தில் அனைவரும் ஒருங்கிணைந்த மீட்பு நடவடிக்கையில் ஈடுபட முடியும். இந்த ஒத்திகை பயிற்சியில் முதன்மை தலைமை பாதுகாப்பு அதிகாரி, தேசிய பேரிடா் மேலாண்மை மூத்த அதிகாரிகள், மருத்துவர்கள், தீயணைப்பு அலுவலர்கள், ஆம்புலன்ஸ் டிரைவர்கள் மற்றும் ரயில்வே பணியாளர்கள் பங்கேற்றனர்.

ஆக 23, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை