உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / திருச்சி / ரங்கா ரங்கா என பக்தி கோஷத்துடன் பக்தர்கள் சுவாமி தரிசனம்| Trichy | Srirangam Ranganatha Temple

ரங்கா ரங்கா என பக்தி கோஷத்துடன் பக்தர்கள் சுவாமி தரிசனம்| Trichy | Srirangam Ranganatha Temple

108 வைணவ தலங்களில் முதன்மையானதும் பூலோக வைகுண்டம் என பக்தர்களால் போற்றி வணங்கப்படும் ஸ்ரீரங்கம் ரெங்கநாதசுவாமி கோயில் வைகுண்ட ஏகாதசி பகல்பத்து உற்சவத்தின் 4 ம் நாள் வெகு விமரிசையாக நடைபெற்றது. வைகுண்ட ஏகாதசி பெருவிழாவின் நான்காம் திருநாளில் நம்பெருமாள் முத்துகொண்டை அணிந்து, வைர பெருமாள் தாயார் பதக்கம், ரத்தின அபயஹஸ்தம், நெல்லிக்காய் மாலை சூடி பாசுரங்களை கேட்டருளி, அர்ச்சுன மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு சேவை சாதித்தார். மாலை வரை அர்ஜுன மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்து வரும் நம்பெருமாள் இரவு 9 மணிக்கு மூலஸ்தானம் சென்றடைவார். வைகுண்ட ஏகாதசி பெருவிழாவின் முக்கிய நிகழ்வான பரமபத வாசல் எனப்படும் சொர்க்கவாசல் வரும் ஜனவரி 10ம் தேதி அதிகாலை திறக்கும் வைபவம் நடைபெறும்.

ஜன 03, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி