உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / திருச்சி / ம் நாள் நிகழ்ச்சியாக பிப்ரவரி 10ல் தை தேரோட்டம் | Trichy | Srirangam Ranganathar Temple

ம் நாள் நிகழ்ச்சியாக பிப்ரவரி 10ல் தை தேரோட்டம் | Trichy | Srirangam Ranganathar Temple

9 ம் நாள் நிகழ்ச்சியாக பிப்ரவரி 10ல் தை தேரோட்டம் | Trichy | Srirangam Ranganathar Temple | Chariot Festival Flag Hoisting பூலோக வைகுண்டம் என அழைக்கப்படும் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் பூபதி திருநாள் கொடியேற்றம் அதிகாலை 6 மணிக்கு தொடங்கியது. நம்பெருமாள் மூலஸ்தானத்தில் இருந்து அதிகாலை 3.30 மணிக்கு கொடியேற்ற மண்டபத்தில் எழுந்தருளினார். 4 வீதிகளிலும் பல்லக்கில் வலம் வந்த கொடிக்கு பூஜை செய்து மேள தாளம் முழங்க வெகுவிமரிசையாக கொடியேற்றம் நடைபெற்றது. இன்று முதல் 11 உற்சவ நாட்களில் தினமும் மாலை நம்பெருமாள் ஹம்ச வாகனம், யாளி வாகனம், கருட வாகனம், யானை வாகனம், தங்க குதிரை உள்ளிட்ட வாகனங்களில் எழுந்தருளி வீதி உலா நடைபெறம். 9 ம் நிகழ்ச்சியாக பிப்ரவரி 10ம் தேதி தை தேரோட்டம் நடைபெறும். விழா ஏற்பாடுகளை, கோயில் அர்ச்சகர்கள் மற்றும் திருக்கோயில் பணியாளர்கள் செய்து வருகின்றனர். கொடியேற்ற நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.

பிப் 02, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ