ஆன்லைனில் போலியாக ரூம் புக் செய்து பணம் திருட்டு
ஆன்லைனில் போலியாக ரூம் புக் செய்து பணம் திருட்டு / Stealing money by fake website to booking a room / Srirangam / Trichy ஸ்ரீரங்கம் கோயிலுக்கு சொந்தமான யாத்திரிகர் தங்கும் விடுதி திருச்சி கொள்ளிடம் கரையில் உள்ளது. இங்கு தமிழகம் மட்டுமின்றி வெளி மாநிலம், வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமானோர் இங்கே ரூம் எடுத்து தங்கி ஸ்ரீரங்கம், திருவானைக்காவல், சமயபுரம் உள்ளிட்ட கோயில்களில் சாமி தரிசனம் செய்து வருகின்றனர். யாத்திரிகர் விடுதிக்கு சொந்தமாக எந்த இணையதளமும் இல்லை. ஆனால் ரூம்களை முன் பதிவு செய்ய, வட மாநிலங்களில் இருந்து, சில போலி இணைய தள முகவரிகளை உருவாக்கி, வாட்ஸ் அப் மூலம் லிங்க் அனுப்பி ரூம்மிற்கு முன் பதிவு செய்து பொதுமக்களிடம் பணத்தை பெற்றுள்ளனர். இதனால் நிறைய பக்தர்கள் போலியான இணையதள முகவரியில் பணத்தை செலுத்தி ஏமாந்து வந்தது யாத்திரிகர் தங்கும் விடுதி நிர்வாகம் கவனத்துக்கு தெரியவந்தது. தொடர்ந்து யாத்திரிகர் நிவாஸ் செயல் அலுவலர் திருச்சி சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார். சைபர் கிரைம் போலீசார் விசாரணை செய்து 4 போலி இணையதளங்களை முடக்கியுள்ளனர். பக்தர்கள் யாரும் போலி இணைய தளங்களை நம்பி ஏமாற வேண்டாம் என யாத்திரிகர் நிவாஸ் நிர்வாகம் வேண்டுகோள் விடுத்துள்ளது. ஸ்ரீரங்கம் யாத்திரிகர் நிவாஸில் தங்க விரும்புவோர் செல்போனில் தொடர்பு கொண்டு நேரடியாக வந்து பணத்தை கொடுத்தால் மட்டுமே ரூம்கள் கொடுக்கப்படும் என்று ஸ்ரீரங்கம் கோயில் இணை கமிஷனர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.