500க்கும் மேற்பட்டோர் ஆர்வமுடன் பங்கேற்பு| State level silambam tournament| Trichy
500க்கும் மேற்பட்டோர் ஆர்வமுடன் பங்கேற்பு/ State level silambam tournament/ Trichy உலக சிலம்பம் இளையோர் சங்கம் மற்றும் தமிழ்நாடு சிலம்பம் அசோசியேஷன் சார்பில் எட்டாவது மாநில அளவிலான ஓப்பன் சிலம்ப போட்டி இன்று துவங்கியது. திருச்சி இ.ஆர். மேல்நிலைப் பள்ளியில் நடைபெறும் போட்டிகளில், 18 மாவட்டங்களைச் சேர்ந்த 500க்கும் மேற்பட்ட வீரர் வீராங்கனைகள் ஆர்வமுடன் கலந்து கொண்டனர். மழலையர், மினி சப் ஜூனியர், சப் ஜூனியர், ஜூனியர், சீனியர் மற்றும் சூப்பர் சீனியர் பிரிவுகளில் போட்டிகள் நடத்தப்படுகிறது. ஒற்றைக்கம்பு, நடுகம்பு வீச்சு, தொடுமுறை கம்பு சண்டை, சுருள்வாள் வீச்சு உள்ளிட்ட போட்டிகளில் வீரர் வீராங்கனைகள் தங்களது திறமையை வெளிப்படுத்தினர். விறுவிறுப்பாக நடக்கும் போட்டியை அனைவரும் கண்டு ரசித்தனர்.