திருச்சி மாவட்ட வலுதுாக்கும் விளையாட்டு சங்கம், தமிழ்நாடு வலுதுாக்கும் சங்கம் ஏற்பாடு
திருச்சி மாவட்ட வலுதுாக்கும் விளையாட்டு சங்கம், தமிழ்நாடு வலுதுாக்கும் சங்கம் ஏற்பாடு | State Powerlifting Competition / Trichy திருச்சி மாவட்ட வலுதூக்கும் விளையாட்டு சங்கம் மற்றும் தமிழ்நாடு வலுதூக்கும் சங்கம் சார்பில் மாநில அளவிலான வலுதூக்கும் போட்டி உறையூர் தனியார் அரங்கில் நடைபெற்றது. இதில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து 700க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டனர். ஆண்கள் மற்றும் பெண்களுக்கு என தனித்தனியே 53, 59, 66, 74, 83, 93, 105, 125 மற்றும் 125க்கும் மேற்பட்ட எடை பிரிவுகளில், பெஞ்ச் பிரஸ் மற்றும் கிளாசிக் டெட் லிஃப்ட் ஆகிய இரு பிரிவுகளில் போட்டிகள் நடத்தப்பட்டு பதக்கங்கள், சான்றிதழ்கள் மற்றும் கோப்பைகள் வழங்கப்பட்டன. இதில் முதல் இரு இடங்களை பிடிக்கும் வீரர்,வீராங்கனைகள் ஹரித்துவாரில் ஜனவரி 18ம்தேதி நடைபெறும் தேசிய அளவிலான போட்டியில் தமிழ்நாடு சார்பில் பங்கேற்பர்.