₹ 15,000 பேரம் பேசி ₹ 10,000 லஞ்சம் வாங்கிய சர்வேயர் கைது | Bribery | surveyor arrest | Trichy
திருச்சி சுப்பிரமணியபுரம் இந்திராகாந்தி தெருவை சேர்ந்தவர் முனியப்பன் வயது 59. மளிகைக்கடை நடத்தி வருகிறார். இவர் திருச்சி கொட்டப்பட்டு கிராமத்தில் 1200 சதுர அடி வீட்டு மனை வாங்கினார். அதை சப் டிவிஷன் செய்து பட்டா பெயர் மாற்றம் செய்ய திருச்சி கிழக்கு தாசில்தார் ஆபீஸில் மனு செய்தார். மனுவை ஆய்வு செய்த சர்வேயர் முருகேசன் 15 ஆயிரம் ரூபாய் லஞ்சம் கேட்டார். பேரம் பேசியதில் 10 ஆயிரம் லஞ்சம் பெற முருகேசன் ஒப்புக்கொண்டார். லஞ்சம் தர விரும்பாத முனியப்பன் லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் கூறினார். போலீசார் கொடுத்து அனுப்பிய ரசாயனம் தடவிய 10 ஆயிரம் ரூபாயை முருகேசனிடம் கொடுத்தபோது மறைந்திருந்த போலீசார் முருகேசனை கையும், களவுமாக பிடித்து கைது செய்தனர்.