திரளான பக்தர்கள் சாமி தரிசனம்
தமிழகத்தில் உள்ள சக்தி தலங்களில் ஒன்றாக விளங்குவது திருவானைக்காவலில் உள்ள அகிலாண்டேஸ்வரி ஆலயம். இக்கோயில் ஆடி திருவிழா ஆண்டுதோறும் மிக சிறப்பாக நடைபெறும். ஆடிப்பூரத்தை ஒட்டி இவ்வாலயத்தின் தெப்ப திருவிழா கடந்த ஜூலை 29ஆம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தினமும் அம்பாள் திருவீதி உலா பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இன்று கோயிலில் அலங்கரிக்கப்பட்ட நான்கு தேர்களில் சுவாமிகள் முக்கிய வீதிகள் வழியாக வலம் வந்தனர். பக்தர்கள் சுவாமிகளை வழிபட்டனர்.
ஆக 06, 2024