உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / திருச்சி / 300 ஆண்டுகளுக்கு பின் நடைபெற்ற உற்சவம் | Thiruvellarai Theppa utsav | Trichy

300 ஆண்டுகளுக்கு பின் நடைபெற்ற உற்சவம் | Thiruvellarai Theppa utsav | Trichy

300 ஆண்டுகளுக்கு பின் நடைபெற்ற உற்சவம்/ Thiruvellarai Theppa utsav/ Trichy ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலின் சார்பு கோயிலான திருவெள்ளறை புண்டரீகாடச பெருமாள் கோயில் தெப்ப உற்சவம் நடைபெற்றது. 108 வைணவ திவ்ய தேசங்களில் ஒன்றான திருவெள்ளறை, பெரியாழ்வார் மற்றும் திருமங்கை ஆழ்வாரால் பாடப் பெற்ற ஸ்தலமாகும். கோயிலின் தெப்பக்குளம் ஆக்கிரமிக்கப்பட்டதால் காலப்போக்கில் தெப்ப உற்சவம் நடைபெறாமல் இருந்தது. உள்ளூர் மக்களின் பெரும் முயற்சியால், தெப்பக்குளம் தூர்வாரப்பட்டது. 300 ஆண்டுகளுக்கு பின் தெப்ப உற்சவம் விமர்சையாக நடைபெற்றது. உற்சவர் பங்கஜவல்லி சமேத செந்தாமரைக்கண்ணன் தெப்பம் மிதவையில் பிரவேசித்தனர். மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட தெப்ப மிதவையில் வலம் வந்து சேவை சாத்தினர். திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

பிப் 24, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி