தென்னாப்ரிக்கா காமன்வெல்த் பவர் லிஃப்ட் போட்டியில் தமிழக வீரர்கள் சாதனை
தென்னாப்ரிக்கா காமன்வெல்த் பவர் லிஃப்ட் போட்டியில் தமிழக வீரர்கள் சாதனை | two sportsman from manapparai won 7 gold and one silver medal தென் ஆப்ரிக்காவில் கடந்த 8ம் தேதி முதல் 14ம் தேதி வரை காமன்வெல்த் பவர் லிஃப்ட் சாம்பியன்ஷிப் போட்டி நடந்தது. இதில் 20 க்கும் மேற்பட்ட நாடுகளை சேர்ந்த வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர். 120 பிளஸ் எடை பிரிவில் திருச்சியை சேர்ந்த பாலமுருகன் பங்கேற்றார். இவர் 770 கிலோ எடையைத் தூக்கி தங்கப்பதக்கம் வென்றார். இப்போட்டியில் இவர் மொத்தம் நான்கு தங்கப் பதக்கங்களை வென்றார். பெண்கள் பிரிவில் ராஜேஸ்வரி 69.440 கிலோ எடையை தூக்கி தங்கப்பதக்கம் வென்றார். இப்போட்டியில் இவர் மொத்தம் மூன்று தங்கம் மற்றும் ஒரு வெள்ளிப் பதக்கம் வென்றார். பதக்கங்களை வென்ற பாலமுருகன், ராஜேஸ்வரி ஆகியோர் சொந்த ஊரான மணப்பாறைக்கு வந்தனர். அவர்களுக்கு விளையாட்டு வீரர்கள் மற்றும் ஊர் மக்கள் சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. விளையாட்டு பயிற்சி மையத்தில் கேக் வெட்டி வீரர்களுக்கு ஊட்டி விட்டு மகிழ்ச்சியை கொண்டாடினர்.