உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / திருச்சி / வைகுண்ட ஏகாதசி வைபவத்தில் ஸ்ரீரங்கா கோஷம் எழுப்பி பக்தர்கள் பரவசம்

வைகுண்ட ஏகாதசி வைபவத்தில் ஸ்ரீரங்கா கோஷம் எழுப்பி பக்தர்கள் பரவசம்

வைகுண்ட ஏகாதசி வைபவத்தில் ஸ்ரீரங்கா கோஷம் எழுப்பி பக்தர்கள் பரவசம் | vaikunda ekadashi swarga vaasal thirappu | Srirangam பூலோக வைகுண்டம் எனப் போற்றப்படும் ஸ்ரீரங்கம் ரங்கநாத சுவாமி கோயிலில் வைகுண்ட ஏகாதசி சொர்க்க வாசல் திறப்பு கோலாகலமாக இன்று நடைபெற்றது வைகுண்ட ஏகாதசி உற்சவம் கடந்த மாதம் 30 ஆம் தேதி திருநெடுந்தாண்டகத்துடன் துவங்கியது அதனை தொடர்ந்து நடைபெற்ற பகல் பத்து உற்சவ சேவையில் நம்பெருமான் தினம் ஒரு அலங்காரத்தில் திருவீதி உலா வந்து அர்ஜுன மண்டபத்தில் அருள் பாலித்தார் விழாவின் முக்கிய நிகழ்வான வைகுண்ட ஏகாதசி சொர்க்க வாசல் திறப்பு இன்று நடைபெற்றது ராப்பத்து நிகழ்வின் முதல் நாளான இன்று அதிகாலை நம்பெருமான் ரத்தின அங்கி அணிந்து பாண்டியன் கொண்டை தரித்து வைர அபய ஹஸ்தம் ஏற்று மூலஸ்தானத்திலிருந்து புறப்பட்டார். திருச்சுற்றிலுள்ள தங்க மரத்தை சுற்றி வந்து பரமபத வாசல் வழியாக நம்பெருமான் பிரவேசித்தார் லட்சக்கணக்கான பக்தர்கள் ரங்கா ரங்கா என கோஷமிட்டு சுவாமி தரிசனம் செய்தனர். பின்னர் நம்பெருமான் திருகொட்டகை பிரவேசம் கண்டருளினார் ஆயிரங்கால் மண்டபத்தில் வீற்றிருக்கும் நம்பெருமானை இன்று இரவு 11 மணி வரை பக்தர்கள் தரிசனம் செய்யலாம். நாளை அதிகாலை ஒரு மணி அளவில் வீணை வாத்தியம் முழங்க நம்பெருமான் மூலஸ்தானம் சென்றடைவார் பெருமாளை சேவிக்க லட்சக்கணக்கான பக்தர்கள் கோயிலில் திரண்டனர் சுமார் 3000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர் பக்தர்களுக்கு தேவையான குடிநீர் வசதிகளை கோயில் நிர்வாகம் ஏற்பாடு செய்தது. ஜனவரி 20ஆம் தேதி நம்மாழ்வார் மோட்சத்துடன் ராப்பத்து உற்சவம் நிறைவு பெறும்.

ஜன 10, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ