தேரோட்டத்தில் கோவிந்தா, ரங்கா கோஷம் முழங்கி பக்தர்கள் பரவசம்
தேரோட்டத்தில் கோவிந்தா, ரங்கா கோஷம் முழங்கி பக்தர்கள் பரவசம் / Trichy / Veeruppan Thirunal Therottam at Srirangam Temple ஸ்ரீரங்கம் நம்பெருமாள் கோயிலில் விருப்பன் திருநாள் எனப்படும் சித்திரை தேர் திருவிழா கடந்த 18ம்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தினமும் நம்பெருமாள் கற்பக விருட்சகம், யாளி, கருட, ஹனுமந்த, யானை ஆகிய வாகனங்களில் பெருமாள் வீதி உலா வந்தார். ஏழாம் திருநாளான 24ம் தேதி நம்பெருமாள் திருச்சிவிகை வாகனத்தில் புறப்பட்டு நெல்லளவு கண்டருளினார். 9ம் திருநாளான அதிகாலை, ஸ்ரீவில்லிப்புத்தூர் ஆண்டாள் கோயிலில் இருந்து சீர் வரிசையாக வந்த கிளி, மாலையை அணிந்த படி மூலஸ்தானத்தில் இருந்து புறப்பட்டு அதிகாலை 5.15 மணிக்கு திருத்தேரில் எழுந்தருளினார். காலை 6.30 மணிக்கு ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோவிந்தா, கோவிந்தா கோஷம் முழங்க தேரினை வடம் பிடித்து இழுத்தனர். 4 முக்கிய வீதிகளை திருத்தேர் வலம் வந்தது. பக்தர்களுக்கு நம்பெருமாள் அருள்பாலித்தார். ஸ்ரீரங்கத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.