/ மாவட்ட செய்திகள்
/ திருச்சி
/ மஞ்சள் நீராடி பக்தர்கள் பரவசம் | Veppilai Mariamman | Temple Chithirai Festival
மஞ்சள் நீராடி பக்தர்கள் பரவசம் | Veppilai Mariamman | Temple Chithirai Festival
திருச்சி மாவட்டம், மணப்பாறை நகரின் மையப்பகுதியில் உள்ளது புகழ்பெற்ற வேப்பிலை மாரியம்மன் கோயில். 500 ஆண்டுகள் பழைமையான இந்த ஆலயத்தில் ஒவ்வொரு ஆண்டும் சித்திரை திருவிழா கோலாகலமாக நடைபெறும். இந்த ஆண்டும் திருவிழா ஏப்ரல் 21 ம்தேதி பூச்சொரிதல் விழாவுடன் வங்கி நடைபெற்றது. முக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்றான பால்குட விழா கடந்த ஞாயிற்றுக்கிழமையும், வேடபரி விழா திங்கள் கிழமையும் நடைபெற்றது. விழாவில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர். இறுதி விழாவான விடையாற்றி விழாவில் பக்தர்கள் பூசாரியின் பாதங்களில் மஞ்சள் நீர் ஊற்றி வழிபட்டனர்.
மே 15, 2024