உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / திருச்சி / நள்ளிரவு வரை காத்துக்கிடந்த தொண்டர்கள் அதிருப்தி | vijay campaign | TVK supporters | trichy

நள்ளிரவு வரை காத்துக்கிடந்த தொண்டர்கள் அதிருப்தி | vijay campaign | TVK supporters | trichy

நள்ளிரவு வரை காத்துக்கிடந்த தொண்டர்கள் அதிருப்தி | vijay campaign | TVK supporters | trichy நடிகர் விஜயோட அரசியல் பிரவேசம் அவரோட ரசிகருங்க மத்தியில பெரும் எதிர்பார்ப்பையும் உற்சாகத்தையும் கொடுத்துச்சு . தமிழக வெற்றி கழகத்தோட முதல் மாநாடு விக்ரவாண்டிலயும் ரெண்டாவது மாநாடு மதுரை பாரபத்திலயும் பிரம்மாண்டமா நடந்து முடிஞ்சுச்சு இந்நிலையில விஜய் தன்னோட முதல் பிரச்சாரத்த திருச்சி மரக்கடை பகுதியில தொடங்கினாரு. காலையில 9:40க்கு திருச்சி ஏர்போர்ட்ல இருந்து கிளம்புனவரு தொண்டர்கள் வெள்ளத்துல மிதந்து 3 மணிக்கு தான் mgr சிலை கிட்டயே போனாரு 10 மணிக்கு விஜய் வந்துடுவருன்றது தான் agenda . இதுக்காக காலைல 6 மணிலருந்து தொண்டருங்க வெயிட் பண்ணிருக்காங்க. கொளுத்துன வெயில்ல குத்தாட்டம் போட்டு தொண்டருங்க ஜாமாயிச்சிட்டாங்க. நேரம் ஆக ஆக தொண்டருங்க கூட்டம் அதிகமாயிடுச்சு. கூட்ட நெரிசல்ல சிக்கி தொண்டருங்க கொத்து கொத்தா மயங்க ஆரம்பிச்சுட்டாங்க. உடனே first aid கொடுத்து, ஆம்புலன்ஸ்ல ஹாஸ்பிடல் அனுப்பி வச்சிருக்காங்க. ஒரு வழியா விஜய்யும் வந்தாருங்க. சரி அவரு என்ன பேச போறாருனு ஆவலா இருந்த தொண்டர்களுக்கு அடுத்த ஷாக். விஜய் வேன் ல ஆடியோ பிரச்சனை. மைக் வேல செய்யல. விஜய் என்ன பேசுறாருனே தெரியாம தொண்டருங்க கத்தி கூச்சல் போட்டு அமர்க்களம் படுத்திட்டாங்க . விஜய பாத்த ஹேப்பில மக்கள் கிளம்புவாங்கனு பாத்த, விஜய் வேன் கூடயே போயி கடும் டிராஃபிக் ஜாம் ஆகிடுச்சு. திருச்சி மரக்கடை பகுதியில இருந்து விஜய் அரியலூர் கிளம்பினாரு. அரியலூர்ல அவருக்கு ஒதுக்கப்பட்ட டைம் 2 மணி. ஆனா விஜய் ராத்திரி 8 மணிக்கு தான் அரியலூர் போயிருக்காரு. பல மணி நேரம் விஜய்க்காக வெயிட் பண்ண தாய்குலம், அவர பாத்துட்டு, அவரு பேசுறதுக்கு முன்னாடியே கிளம்பி போயிட்டாங்க . அதுமட்டுமில்லாம கூட்டத்துல இருந்த ரசிகருங்க பேனர் மேல ஏறி அத கிழிச்சு ரகளை செஞ்சுட்டாங்க. இதலா நோட் பண்ணிட்டு, வெறும் 15 நிமிஷம் பேசுன விஜய், ஜூட்னு கிளம்பிட்டாரு. அரியலூர்ல இருந்து கிளம்பவே மணி 10 தாண்டிடுச்சு. விஜயோட next program பெரம்பலூர்ல நடக்க இருந்துச்சு. 5 மணிக்கு விஜய் வருவாருனு சுமார் 3 மணிலருந்து எல்லாரும் காத்துக்கிடந்துருக்காங்க. ராத்திரி 12 மணி ஆகியும் விஜய் வரல. பெரம்பலூருக்கு விஜய் வர மாட்டாருனு ஏற்கனவே கட்சி வட்டாரத்துல தெரிஞ்சதா சொல்லப்படுது. ஆனாலும், விஜய் வருவாரு. பேசலனாலும், கை அசச்சிட்டு போவாருனு மக்கள் ரோட்லயே இருந்துருக்காங்க. இந்தா வராரு, அந்தா வராருனு புல்லிங்கோ பசங்க ராத்திரி பைக் ஓட்டிட்டு ரகள செஞ்சது தான் மிச்சம். ராத்திரி ஒன்ற மணி ஆகியும் விஜய் வந்தபாடில்ல. இதுக்கு மேல விஜய் வர மாட்டாருனு, மக்கள் கூட்டம் கொஞ்சம் கொஞ்சமா களைய ஆரம்பிச்சது. பல மணி நேரம் காத்து கிடந்தும் விஜய் வரலனு கடுப்பான தொண்டருங்க, காலையில பகிரங்கமா போஸ்டர் அடிச்சு ஒட்டிட்டாங்க. ரொம்ப பெரிய expectationஓட ஸ்டார்ட் ஆன விஜய் first பிரச்சாரம் முழுசா complete ஆகவே இல்ல. திட்டமிட்டபடி அவரு பெரம்பலூருக்கு போகல. இது தொண்டருங்க மத்தில அதிருப்திய ஏற்படுத்திருக்கு. முறையான திட்டமிடல் இல்ல. சரியான ஏற்பாடு இல்லனு பலரும் பொலம்புனாங்க. எத பண்ணாலும் ப்ளான் பண்ணி பண்ணனும் ப்ரோனு ரசிகருங்க எரிச்சலோட அப்சட்டா டயலாக் பேசிட்டு வீட்ட பாக்க கிளம்பி போயிட்டாங்க. இனி வர்ற பிரச்சாரத்துல விஜய் என்ன செய்யப்போறாருனு பொறுத்து இருந்து பார்ப்போம்.

செப் 14, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ