மாதா, மாரியிடம் மனமுருகிய தவெக பொதுச்செயலாளர் ஆனந்த்
மாதா, மாரியிடம் மனமுருகிய தவெக பொதுச்செயலாளர் ஆனந்த் | Trichy | Prayers offered in temples for Vijays victory திருச்சி கிழக்கு தொகுதியில் போட்டியிடும் தவெக தலைவர் விஜய் இன்று அனல் பறக்கும் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். முன்னதாக கட்சியின் பொதுச்செயலாளர் ஆனந்த், வயர்லெஸ் ரோட்டில் உள்ள அந்தோணியார் சர்ச்சில் விஜய் வெற்றி பெற மெழுகுவர்த்தி ஏந்தி சிறப்பு பிரார்த்தனையில் ஈடுபட்டார். பாதிரியார் மற்றும் கிறிஸ்தவர்களிடம் ஆதரவு திரட்டினார். தொடர்ந்து சர்ச் அருகில் உள்ள மாரியம்மன் கோயிலுக்கு சென்று விஜய் பெயரில் அர்ச்சனை செய்தார். விஜய் வெற்றி பெற வேண்டி ஆனந்த் அம்மனை மனமுருக வேண்டினார்.
ஏப் 19, 2026