உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / திருச்சி / ஏப்ரல் 7ம் தேதி கும்பாபிஷேகம் | Yerumbeeswarar Temple consecration| Muhurtakaal function| Trichy

ஏப்ரல் 7ம் தேதி கும்பாபிஷேகம் | Yerumbeeswarar Temple consecration| Muhurtakaal function| Trichy

ஏப்ரல் 7ம் தேதி கும்பாபிஷேகம் / Yerumbeeswarar Temple consecration/ Muhurtakaal function/ Trichy திருச்சி திருவெறும்பூர் மலை மீது ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த நறுங்குழல் நாயகி சமேத எறும்பீஸ்வரர் கோயில் உள்ளது. இந்தக் கோயில் மத்திய தொல்பொருள் ஆய்வுத் துறையினரால் பராமரிக்கப்படுகிறது. தமிழக அறநிலையத்துறை நிர்வாக கட்டுப்பாட்டில் உள்ளது. கோயிலுக்கு பல ஆண்டுகளாக கும்பாபிஷேகம் நடத்தப்படவில்லை. தொடர்ந்து தொகுதி எம்எல்ஏவும் பள்ளி கல்வி அமைச்சருமான மகேஷ் மற்றும் அறநிலைய அமைச்சர் சேகர்பாபு முயற்சியால் திருப்பணிகள் நிறைவு பெற்றன. ஏப்ரல் ஏழாம் தேதி கோயில் கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. இதற்கான முகூர்த்தக்கால் நடும் விழா இன்று அறங்காவலர் குழு தலைவர் பழனியப்பன் தலைமையில் நடைபெற்றது. கும்பாபிஷேக உபயதாரர் ரவீந்திரன், இந்திய தொல்லியல் துறையினர், அறங்காவலர் உறுப்பினர்கள் மற்றும் பக்தர்கள் கலந்து கொண்டனர்.

மார் 05, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை