/ மாவட்ட செய்திகள்
/ வேலூர்
/ திமுக அரசை கண்டித்து வேலூரில் அதிமுக திடீர் ஆர்ப்பாட்டம் | ADMK Protest | KP Munusamy | Vellore
திமுக அரசை கண்டித்து வேலூரில் அதிமுக திடீர் ஆர்ப்பாட்டம் | ADMK Protest | KP Munusamy | Vellore
வேலூர் மாவட்டம் அணைக்கட்டு பஸ் ஸ்டாண்டில் புறநகர் மாவட்ட அதிமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. துணை பொதுச்செயலாளர் கேபி முனுசாமி தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் வேலழகன் முன்னிலை வகித்தார். வேலூர் மாவட்ட ஏரிகளில் சட்ட விரோதமாக மண், கிராவல் மண், மணல் அள்ளப்படுகிறது; ஆனால் திமுக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறி கோஷம் போட்டனர். பீஞ்சமந்தை பாலாம்பட்டு மலை வாழ் மக்களுக்கு மருத்துவ வசதி செய்து தராததை கண்டிதும் கோஷம் போட்டனர்.
ஜன 22, 2024