உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / வேலூர் / அறிவியலா ஆன்மிகமா குவியும் டூரிஸ்டுகள் | Vellore | 50-Head Muneeswaran

அறிவியலா ஆன்மிகமா குவியும் டூரிஸ்டுகள் | Vellore | 50-Head Muneeswaran

அறிவியலா ஆன்மிகமா குவியும் டூரிஸ்டுகள் | Vellore | 50-Head Muneeswaran ​வேலூர் மாவட்டம் லத்தேரி பன மடங்கியிலிருந்து பரதராமி செல்லும் ரோட்டில் உள்ள குக்கலபள்ளியில் பல கிளைகளுடன் பனை மரம் ஒன்று அப்பகுதி மக்களிடையே பெரும் ஆச்சரியத்தையும் வியப்பையும் ஏற்படுத்தியுள்ளது. பொதுவாக பனை மரம், வறட்சியைத் தாங்கி வளரக்கூடிய கிளைகள் இல்லாத ஒரு தடி தாவர இனம். மரம் நேராக வளர்ந்து அதன் உச்சியில் மட்டுமே ஓலைகளும் நுங்கு குலைகளும் விடுவது அதன் இயல்பு. ஆனால் இந்த மரத்தில் ஆச்சரியப்படும் விதமாக 50 க்கும் மேற்பட்ட கிளைகளாகப் பிரிந்து வளர்ந்துள்ளது. ஒவ்வொரு கிளையிலும் தனித்தனியாக ஓலைகளும், நுங்கு காய்களும் காய்த்து தொங்குகிறது. இந்த வினோத பனை மரத்தில் முனீஸ்வரன் குடி கொண்டுள்ளதாக தகவல் தீயாக பரவியது, அதனையடுத்து சுற்றியுள்ள கிராமங்களில் இருந்தும், பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஆன்மிக வாதிகள், பொதுமக்கள் தினசரி இந்த அதிசய பனை மரத்தை ஆச்சரியத்துடன் பார்த்துச் செல்கின்றனர். அறிவியலோ, ஆன்மீகமோ, அதிசயமோ, எதுவாக இருந்தாலும், வறண்ட நிலப்பகுதியில் கம்பீரமாகப் பல கிளைகளுடன் காட்சியளிக்கும் இந்த பனை மரம், இப்பகுதிக்கு டூரிஸ்டுகளை வெகுவாகக் கவர்ந்து வருகிறது.

ஜூலை 20, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ