காரில் வந்த மர்ம கும்பல் கைவரிசை| Illegal trafficking| crime news | child rescue | Vellore
காரில் வந்த மர்ம கும்பல் கைவரிசை| Illegal trafficking| crime news | child rescue | Vellore வேலூர் குடியாத்தம் காமாட்சி அம்மன் பேட்டையை சேர்ந்த சாஃப்ட்வேர் இன்ஜினியர் வேணு. இவரது நான்கு வயது மகன் யோகேஷ். அருகில் இருக்கும் பள்ளியில் படித்து வருகிறார். இன்னிலையில் இன்று மதியம் லஞ்ச் பிரேக்கிற்காக வேணு தனது மகனை அழைத்துக்கொண்டு வீட்டிற்கு வந்தார். அப்போது வீட்டு வாசலில் காரில் வந்த மர்ம கும்பல் திடீரென அந்த கொடூர சம்பவத்தை செய்தனர். வாசலில் நின்ற வேணு மீது மிளகாய் பொடியை தூவி விட்டு, குழந்தை யோகேஷை கடத்திச் சென்றனர். என்ன நடக்கிறது என்று புரியாத வேணு கூச்சல் போட்டு அலறினார். குழந்தையை கடத்திய கார் மின்னல் வேகத்தில் பறந்தது. சம்பவம் குறித்து குடியாத்தம் போலீசாருக்கு உடனடியாக தகவல் தெரிவிக்கப்பட்டது. அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகள் மூலம் போலீசார் காரை ட்ராக் செய்ய முயற்சித்தனர். வெள்ளை நிறத்தில் கர்நாடகா பதிவு எண் கொண்ட சொகுசு காரில் மர்ம கும்பல் குழந்தையை கடத்தியது பதிவாகி இருந்தது. மாநில எல்லை ரோந்து பணிகள் தீவிர படுத்தப்பட்டது. மிகவும் குறுகலான ரோடு வழியே கார் பயங்கர வேகமாக சென்றது. பட்டப்பகலில் வீட்டு வாசலில் குழந்தை கடத்தப்பட்ட சம்பவம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது பெற்றோர்கள் கதறி துடித்தனர். Breath இந்நிலையில் குழந்தை கடத்தப்பட்ட சில மணி நேரத்தில் எதிர்பாராத டுவிஸ்ட் நடந்தது. மாதனூர் பகுதியில் மர்மகும்பல் குழந்தையை காரில் இருந்து இறக்கிவிட்டு சென்றனர். வேணுவின் வீட்டில் இருந்து இந்த பகுதி சுமார் 10 கி.மீ தொலைவில் உள்ளது. சிசிடிவி காட்சிகளை ட்ராக் செய்த போலீசார் குழந்தையை பத்திரமாக மீட்டனர். முதற்கட்ட விசாரணையில் காரில் இருந்த கர்நாடகா பதிவு எண் போலியானது என தெரியவந்துள்ளது. குழந்தை கிடைத்த மகிழ்ச்சியில் பெற்றோர் ஆனந்த கண்ணீர் விட்டனர் கடத்தல் கும்பல் யார்? அவர்கள் நோக்கம் என்ன என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். பட்டப் பகலில் வீட்டு வாசலில் குழந்தை கடத்தப்பட்ட சம்பவம் பொது மக்களிடையே பெரும் பீதியை கிளப்பியுள்ளது.