உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / வேலூர் / வேலூரில் மதுவுக்கு எதிராக 5 கிமீ மாரத்தான் போட்டி! ஆர்வமுடன் பங்கேற்ற மாணவர்கள்|Marathon|Vellore

வேலூரில் மதுவுக்கு எதிராக 5 கிமீ மாரத்தான் போட்டி! ஆர்வமுடன் பங்கேற்ற மாணவர்கள்|Marathon|Vellore

வேலூரில் மது குடிப்பதற்கு எதிரான விழிப்புணர்வு மாரத்தான் போட்டி வேலூர் தொழில்நுட்ப பல்கலைக்கழக வளாகத்தில் நடந்தது. போட்டியை கலெக்டர் குமாரவேல் பாண்டியன் துவங்கி வைத்தார். பள்ளி, கல்லூரி மாணவர்கள், மக்கள் திரளாக பங்கேற்றனர். 5 கிலோ மீட்டர் தூரத்துக்கு மாரத்தான் நடந்தது. ஆண்கள் பிரிவில் மாதவ கிருஷ்ணன் முதல் பரிசு, ரஞ்சித் 2ம் பரிசு, அபிநந்தன் 3ம் பரிசு பெற்றனர். பெண்கள் பிரிவில் முதல் பரிசு பாரதி, 2ம் பரிசு சித்ரா, 3ம் பரிசு ஜெயஸ்ரீ பெற்றனர். முதல் பரிசாக 10 ஆயிரம், 2ம் பரிசாக 7 ஆயிரம், 3ம் பரிசாக 5 ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டது.

ஜன 06, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ