/ மாவட்ட செய்திகள்
/ வேலூர்
/ காட்பாடி அருகே 2 ஏக்கர் கரும்பு தோட்டம் தீயில் சாம்பல் | fire accident | sugar cane | katpadi
காட்பாடி அருகே 2 ஏக்கர் கரும்பு தோட்டம் தீயில் சாம்பல் | fire accident | sugar cane | katpadi
வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த கருகிரியை சேர்ந்த விவசாயி ராமன். இவர் தனது 6 ஏக்கர் நிலத்தில் கரும்பு சாகுபடி செய்துள்ளார். இவரது கரும்பு தோப்பில் திடீரென தீப்பற்றியது. இதை பார்த்த பக்கத்து தோட்ட விவசாயி ராமனுக்கும், தீயணைப்பு துறைக்கும் தகவல் தெரிவித்தார். தீயணைப்பு வீரர்கள் வேகமாக வந்து தீயை கட்டுப்படுத்தினர். அதற்குள் 2 ஏக்கர் கரும்பு முற்றிலும் எரிந்து சாம்பலானது. இதை பார்த்து ராமன் கண் கலங்கினார். கரும்பு தோட்டத்துக்கு யாரேனும் தீ வைத்தார்களா? அல்லது மின் ஒயர் உரசி தீப்பற்றியதா என்று தெரியவில்லை. விசாரணை நடக்கிறது.
ஜன 24, 2024