முதல்வர் ஸ்டாலின் பிறந்த நாள் விழா கால்பந்து போட்டி
முதல்வர் ஸ்டாலின் பிறந்த நாள் விழா கால்பந்து போட்டி / football tournament /5 district teams participate /katpadi முதல்வர் ஸ்டாலின் பிறந்த நாளையொட்டி வேலூர் மாவட்ட திமுக சார்பில் காட்பாடியில் ஐந்து மாவட்ட கால்பந்து போட்டி துவங்கியது. மாநகராட்சி துணை மேயர் சுனில் குமார் தலைமை வகித்தார். கதிர் ஆனந்த் துவக்கி வைத்தார். இன்றும் நாளையும் நடக்கும் போட்டியில் வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு ஆகிய ஐந்து மாவட்டங்களை சேர்ந்த 24 அணிகள் பங்கேற்றன. வெற்றி பெறும் அணிக்கு முதல் பரிசு 30 ஆயிரத்து 72 ரூபாய், இரண்டாம் பரிசு 20 ஆயிரத்து 72 ரூபாய், மூன்றாம் பரிசு 15 ஆயிரத்து 72 ரூபாய் மற்றும் நான்காம் பரிசு 10 ஆயிரத்து 72 ரூபாய் ரொக்கப்பரிசு மற்றும் கோப்பைகள் வழங்கப்படும். நாளை இரவு பரிசளிப்பு விழா நடக்கிறது.