உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / வேலூர் / வேலுாரில் கள்ளச்சாராய திட்டங்களுக்கு முன்பு தமிழக முதல்வர் திட்டங்கள் எதுவும் எடுபடவில்லை?

வேலுாரில் கள்ளச்சாராய திட்டங்களுக்கு முன்பு தமிழக முதல்வர் திட்டங்கள் எதுவும் எடுபடவில்லை?

வேலுாரில் கள்ளச்சாராய திட்டங்களுக்கு முன்பு தமிழக முதல்வர் திட்டங்கள் எதுவும் எடுபடவில்லை? | Vellore | Houses converted Tasmac திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி முல்லை கிராமம் உட்பட சில பகுதிகளில் டாஸ்மாக் மது பாட்டில்களை வாங்கி பலசரக்கு, பெட்டிக் கடைகளில் கூடுதல் விலைக்கு விற்பது ஜோராக நடக்கிறது. இங்கு 24 மணி நேரமும் கிடைக்கும் சரக்குகளை வாங்கி குடிமகன்கள் பொது இடங்கள் மற்றும் அரசு அலுவலக வளாகங்களை பாராக மாற்றி வருகின்றனர். கழிவுகளை அங்கேயே போடுகின்றனர். காலி பாட்டில்களை உடைத்து ரோட்டில் வீசுகின்றனர். மேலும் ஆந்திராவில் இருந்தும் கள்ள சாராய பாக்கெட்டுகள் வாங்கி வீடுகளில் பதுக்கி விற்பனை செய்வதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய சாவுகளின் சுவடுகள் இன்னும் ஆறாத நிலையில் மீண்டும் ஒரு கள்ளச்சாராய சாவுகள் நிகழாமல் போலீசார் மற்றும் மாவட்ட நிர்வாகம் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெண்கள் வலியுறுத்தினர்.

நவ 18, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !