உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / வேலூர் / குற்றவாளி சிறுவனுக்கும் சிறை | Lady Dr murder case|20 years punishment

குற்றவாளி சிறுவனுக்கும் சிறை | Lady Dr murder case|20 years punishment

குற்றவாளி சிறுவனுக்கும் சிறை | Lady Dr murder case|20 years punishment வேலுார் காட்பாடி சி.எம்.சி ஹாஸ்பிடலில் பணிபுரிந்த பீஹாரைச் சேர்ந்த பெண் டாக்டர் தனது நண்பருடன் 2022 மார்ச் 16ல் காட்பாடியில் சினிமா பார்த்து விட்டு அறைக்கு திரும்பி கொண்டிருந்தார். வழியில் 5 பேர் கொண்ட கும்பல் ஆட்டோவில் வேலுார், பாலாறு பகுதிக்கு கடத்தி 40,000 ரூபாய், 2 சவரன் மற்றும் செல்போனை பறித்தனர். பின்னர் பெண் டாக்டரை ஐவர் கும்பல் கூட்டு பலாத்காரம் செய்து தப்பினர். பாதிக்கப்பட்ட டாக்டர் வேலுார் எஸ்.பி ஆபீஸில் புகார் அளித்தார். இவ்வழக்கில் ஆட்டோ டிரைவர் பார்த்திபன், கூலித்தொழிலாளி மணிகண்டன், பரத், சந்தோஷ் மற்றும் 17 வயது சிறுவன் என ஐந்து பேரை போலீசார் கைது செய்தனர். இவ்வழக்கு வேலுார் மகளிர் கோர்ட்டில் நடந்தது. விசாரணை நடத்திய நீதிபதி மகேஸ்வரி, 4 குற்றவாளிகளுக்கும் தலா 20 ஆண்டு சிறை மற்றும் தலா 25,000 ரூபாய் அபராதம் விதித்து தீர்ப்பளித்தார். மற்றொரு குற்றவாளியான சிறுவனுக்கு 20 ஆண்டு சிறை தண்டனை விதித்து உத்தரவிட்டார்.

பிப் 19, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை