வேலுார் கலெக்டர், எஸ்பி அஞ்சலி | Soldier killed Burial with military honours
வேலூர் மாவட்டம் கே.மோட்டூர் கிராமத்தைச் சேர்ந்தவர் கோகுல். ராணுவ வீரரான இவர் சத்டீஸ்கர் மாநிலம் ராயப்பூர் நக்சலைட் தடுப்பு பிரிவில் வேலை பார்த்தார். கடந்த இரண்டு நாட்களுக்கு முன் ராயப்பூர் அருகே காட்டுப் பகுதியில் சக வீரர்களுடன் தேவன் பணியில் ஈடுபட்டார். அங்கு வந்த 300க்கும் மேற்பட்ட நக்சலைட்டுகள் அந்த முகாமை சுற்றி வளைத்து துப்பாக்கியால் சுட்டனர். இதில் தேவன் உட்பட மூன்று வீரர்கள் ஸ்பாட்டிலேயே பலியானார்கள். தேவன் உடல் சொந்த ஊருக்கு கொண்டு வரப்பட்டு மக்கள் அஞ்சலிக்கு வைக்கப்பட்டது. தேவன் உடலுக்கு ராணுவ உயர் அதிகாரிகள் மற்றும் கலெக்டர் எஸ்பி, எம்எல்ஏ மற்றும் பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினர். 21 குண்டுகள் முழக்க ராணுவ மரியாதையுடன் தேவன் உடல் அடக்கம் செய்யப்பட்டது. தேவனுக்கு காயத்ரி என்ற மனைவியும் ஓவியா என்ற ஒன்றரை வயது மகளும் உள்ளனர்.