குழந்தை பாக்கியம் வேண்டி வினோதம் | 9 Lemons Auction for ₹2,36 Lakhs
விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூர் அருகேயுள்ள ஒட்டனந்தல் கிராமத்தில் ரத்தினவேல் முருகன் கோயில் உள்ளது. இக்கோயிலில் பங்குனி உத்திரத் திருவிழா கடந்த 15ம் தேதி தொடங்கியது. விழா காலங்களில் தினமும் கோயில் வேலில் எலுமிச்சைப் பழங்களை பக்தர்கள் சொருகுவர். விழா முடிந்து 9வது நாளில் எலுமிச்சம் பழங்களை இடும்பன் பூஜையில் வைத்து ஏலம் விடுவர். இந்த பழத்தினை குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் வாங்கி சாப்பிட்டால் குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பது நம்பிக்கை. இன்று நடந்த ஏல நிகழ்ச்சியில் பல மாவட்டங்களில் இருந்து நூற்றுக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். பூசாரிகள் ஏலத்தை நடத்தினர். முதல் ஏலத்தில் விடப்பட்ட எலுமிச்சைப் பழம் 50,500 ரூபாய்க்கு ஏலம் போனது. ஏலத்தில் மொத்தம் 9 பழங்கள் 2 லட்சத்து 36 ஆயிரத்து 100 ரூபாக்கு ஏலம் போனது. பழத்தை ஏலம் எடுத்தவர்கள் பூசாரி முன்பு மண்டியிட்டு முந்தானையில் எலுமிச்சை பழத்தினை பெற்றனர்.