உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / விழுப்புரம் / அரவாண் சிரசுக்கு திருக்கண் திறத்தல் நிகழ்ச்சி| Koothandavar Temple | Chithirai Chariot

அரவாண் சிரசுக்கு திருக்கண் திறத்தல் நிகழ்ச்சி| Koothandavar Temple | Chithirai Chariot

விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள கூவாகம் கூத்தாண்டவர் கோயிலில் சித்திர திருவிழா கடந்த 9ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. திருநங்கை தாலி கட்டும் நிகழ்ச்சி செவ்வாய் கிழமை நடந்தது. இன்று காலை அரவாண் சிரசுக்கு திருக்கண் திறத்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. தொடர்ந்து கீரிமேடு கிராமத்தில் இருந்து கொண்டுவரப்பட்ட புஜம், மார்பு, நத்தம் கிராமத்திலிருந்து கொண்டுவரப்பட்ட கை, கால்களை 21 அடி உயர தேரில் பொருத்தி தேரோட்டம் நடந்தது. திருநங்கைகள் மற்றும் கிராம மக்கள் ஆயிரக்கணக்கானோர் தேரை வடம் பிடித்து இழுத்தனர். கிராம மக்கள் தங்கள் நிலத்தில் விளைந்த பொருட்களையும், சில்லரைக் காசுகளையும் சுவாமி மீது வீசி வழிபட்டனர். தேர் செல்லும் பாதையில் திருநங்கைகள் சூரத்தேங்காய்களை உடைத்து கற்பூரம் ஏற்றி கும்மியடித்து வழிபட்டனர்.

ஏப் 24, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ