/ மாவட்ட செய்திகள்
/ விழுப்புரம்
/ ஆயிரக்கனக்கான பக்தர்கள் வடம் பிடித்தனர் | Mailam Murugan Temple Car Festival
ஆயிரக்கனக்கான பக்தர்கள் வடம் பிடித்தனர் | Mailam Murugan Temple Car Festival
விழுப்புரம் மாவட்டம், மயிலம் கிராமத்தில் பழமை வாய்ந்த வள்ளி, தெய்வானை, சுப்பிரமணியர் சுவாமி கோயிலில் கடந்த 15ம் தேதி கொடியேற்றத்துடன் பங்குனி உத்திர விழா துவங்கியது. நேற்று இரவு திருக்கல்யாணம் நடந்தது. இன்று காலை தேரோட்டத்தை முன்னிட்டு அலங்கரிக்கப்பட்ட தேரை மயிலம் பொம்மபுர ஆதினம் சிவஞான பாலய சுவாமிகள் வடம் பிடித்து துவக்கி வைத்தார். தொடர்ந்து ஏராளமான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்து சென்றனர். தேரடியில் கூடியிருந்த பக்தர்கள் விவசாய நிலங்களில் விளைந்த தானியங்களை தேரடியில் வீசி நேர்த்தி கடனை செலுத்தி வழிபட்டனர்.
மார் 23, 2024