/ மாவட்ட செய்திகள்
/ விழுப்புரம்
/ மக்கள் வெள்ளத்தில் மிதந்த தேர் | Car Festival at Melmalayanur Angalamman Temple
மக்கள் வெள்ளத்தில் மிதந்த தேர் | Car Festival at Melmalayanur Angalamman Temple
விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் அங்காளம்மன் கோயிலில் மாசிப் பெருவிழா கடந்த 8ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. மறுநாள் மயான கொள்ளையும், கடந்த 12ம் தேதி தீமிதி விழாவும் நடந்தது. அதைத் தொடர்ந்து இன்று மாலை 4 மணிக்கு திருத்தேர் வடம் பிடித்தல் நிகழ்ச்சி துவங்கியது. சிறப்பு அலங்காரத்தில் அம்மன் எழுந்தருளினார். விழாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து அம்மனை வழிபட்டனர் . தேர் மாடவீதி வழியாக வந்தபோது பக்தர்கள் காய் கனிகள், நாணயங்கள், தானியங்களை வாரி இறைத்து அம்மனுக்கு நேர்த்திகடன் செலுத்தினர். விழாவில் அமைச்சர் மஸ்தான், கலெக்டர் பழனி, எம்.எல்.ஏ. சிவக்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
மார் 14, 2024