உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / விழுப்புரம் / விழுப்புரம் டிஐஜி திஷா மிட்டல் அதிரடி | Kallakurichi | SSI Compulsory retirement| DIG's order

விழுப்புரம் டிஐஜி திஷா மிட்டல் அதிரடி | Kallakurichi | SSI Compulsory retirement| DIG's order

கள்ளக்குறிச்சி மாவட்டம் கல்வராயன் மலை கரியலூர் போலீஸ் ஸ்டேசனில் சிறப்பு எஸ்ஐயாக பணியாற்றியவர் ராமலிங்கம். இவர் கடந்த 2023ல் போலி மதுபான ஆலை நடத்திய கோட்டப்புத்தூரை சேர்ந்த வெங்கடேசனிடம் லஞ்சம் பெற்றதாக குற்றசாட்டு எழுந்தது. எஸ்பி மோகன்ராஜ் விசாரிணை நடத்தியதில் லஞ்சம் வாங்கியது உறுதியானது. இதையடுத்து ராமலிங்கத்தை 2 மாதம் சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார். சஸ்பெண்ட் காலம் முடிந்து மூங்கில் துறைப்பட்டு போலீஸ் ஸ்டேசனில் சிறப்பு எஸ்ஐயாக ராமலிங்கம் பணியில் சேர்ந்தார். லஞ்சம் வாங்கிய இவருக்கு குறைந்தபட்சம் தண்டனை வழங்கியதாக குற்றச்சாட்டு எழுந்தது. விழுப்புரம் டிஐஜி திஷா மிட்டல் விசாரணை நடத்தி ராமலிங்கத்திற்கு வழங்கப்பட்ட தண்டனை மிக குறைவாக உள்ளதாக கருதினார். இதையடுத்து அதிகபட்ச தண்டனையாக ராமலிங்கத்துக்கு கட்டாய பணி ஓய்வு வழங்கி டிஐஜி உத்தரவிட்டார்.

அக் 20, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ