மது குடிப்போர் விழிப்புணர்வு சங்க பொதுச் செயலாளர் ஆறுமுகம் வினோதம்| Vikravandi by-election
விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி இடைத் தேர்தலில் தமிழ்நாடு மது குடிப்போர் விழிப்புணர்வு சங்கத்தின் பொதுச் செயலாளர் ஆறுமுகம் போட்டியிடுகிறார். வேட்பு மனு தாக்கலின் போது டெபாசிட் தொகை செலுத்துவதற்காக வெள்ளை சேலை அணிந்து, கையில் தாலியுடன் தெருத்தெருவாக சென்று காலி மதுபாட்டில்கள் மற்றும் பிளாஸ்டிக் டம்ளர்களை சேகரித்து பழைய இரும்பு கடையில் எடைக்கு போட்டு வருகிறார். அதில் கிடைக்கும் பணத்தை சேகரித்து தேர்தலில் போட்டியிட வரும் 20 ம் தேதி டெபாசிட் செலுத்த உள்ளார். மது குடிப்பதால் பெண்களின் தாலி அறுக்கப்படுவதாக ஆறுமுகம் குமுறினார். இதை சுட்டிக்காட்டும் விதமாக வெள்ளைச்சேலை, கையில் தாலியுடன் மது பாட்டில்களை பொறுக்கி விழிப்புணர்வு ஏற்படுத்தி வருவதாக கூறினார்.