உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / விருதுநகர் / உடல் முழுவதும் காயங்களுடன் அலறித் துடித்த 4 வயது சிறுமி

உடல் முழுவதும் காயங்களுடன் அலறித் துடித்த 4 வயது சிறுமி

உடல் முழுவதும் காயங்களுடன் அலறித் துடித்த 4 வயது சிறுமி | Virudhunagar |Srivilliputhur |POCSO Act |Child Abuse Case விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் மாரியம்மன் கல்லறை தெருவைச் சேர்ந்தவர் ஜெகநாதன். இவருக்கு பொன்லட்சுமி என்ற மனைவி உள்ளார். தொழில் காரணமாக ஜெகநாதன் அடிக்கடி வெளிநாடு சென்று வந்தார். விமானப் பயணங்களின்போது அதே ஊரை சேர்ந்த நந்தினி என்ற பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டு, பின்னர் அது கள்ளக்காதலாக மாறியது. நந்தினி ஏற்கனவே இரண்டு பேரை திருமணம் செய்து, அவர்களைப் பிரிந்து வாழ்ந்து வந்த நிலையில், அவருக்கு 4 வயது பெண் குழந்தை உள்ளார். ஜெகநாதன் தனது மனைவியைப் பிரிந்தார். நந்தினி, அவரது நான்கு வயது பெண் குழந்தையுடன் ஸ்ரீவில்லிபுத்தூரில் தனியாக வீடு எடுத்து வசித்து வந்தார். கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு சிறுமிக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. ஜெகநாதனும் நந்தினியும் குழந்தையை அருகிலுள்ள அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு சிறுமியின் உடலில் பலத்த காயங்கள் இருப்பதை கண்ட மருத்துவர்கள் சந்தேகமடைந்து உடனடியாக ஸ்ரீவில்லிபுத்தூர் காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர். இதையறிந்த கள்ளக்காதல் ஜோடி மருத்துவமனையில் சிறுமியை விட்டுவிட்டு எஸ்கேப் ஆகினர். சிறுமியின் பாட்டி அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார், தனிப்படை அமைத்து இருவரையும் தேடி வந்தனர். ஒடிசா மாநிலம் ஜெகத்பூர் பகுதியில் பதுங்கியிருந்த ஜெகநாதன் மற்றும் நந்தினியை கைது செய்த போலீசார், ஸ்ரீவில்லிபுத்துார் அழைத்து வந்து விசாரணை நடத்தினர். விசாரணையில் 4 வயது சிறுமியை ஜெகநாதன் கொடூரமாக தாக்கி சித்திரவதை செய்ததுடன், பாலியல் துன்புறுத்தலுக்கும் ஆளாக்கியுள்ளார். இந்தக் கொடூரச் செயலுக்கு சிறுமியின் தாய் நந்தினியும் உடந்தையாக இருந்தது போலீசார் விசாரணையில் உறுதியானது. ஜெகநாதன் மற்றும் நந்தினி மீது போக்சோ சட்டம் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்த போலீசார், இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். பெற்ற தாய் உடந்தையுடன் சிறுமியை, தாயின் கள்ளக்காதலன் பாலியல் ரீதியாக சீண்டிய சம்பவம் ஸ்ரீவில்லிபுத்துாரில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

ஜூலை 29, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை