உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / விருதுநகர் / 10 பேரை பலி கொண்ட வெடி விபத்தில் ஒருவர் கைது | cracker factory blast | virudhunagar

10 பேரை பலி கொண்ட வெடி விபத்தில் ஒருவர் கைது | cracker factory blast | virudhunagar

விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை அருகே ராமதேவன்பட்டியில் உள்ள பட்டாசு ஆலையில் நேற்று பயங்கர வெடி விபத்து ஏற்பட்டது. உடல் சிதறி 10 பேர் மரணம் அடைந்தனர். 4 பேர் பலத்த காயம் அடைந்தனர். இது தொடர்பாக ஆலங்குளம் போலீசார் விசாரித்தனர். அஜாக்கிரதையாக செயல்பட்டு மனித உயிருக்கு சேதம் ஏற்படுத்தியது, வெடி பொருட்களை முறையாக கையாளாதது உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் ஆலை உரிமையாளர் விக்னேஷ், மேலாளர் ஜெயபால், போர்மென் சுரேஷ்குமார் மீது வழக்கு பதிவு செய்தனர். இப்போது போர்மென் சுரேஷ் குமாரை கைது செய்துள்ளனர். மற்ற 2 பேரையும் போலீசார் தேடி வருகின்றனர்.

பிப் 18, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !