உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / விருதுநகர் / இளைஞர்களின் செயலால் உயிர்தப்பிய பயணிகள் | Karaikudi | Stone pelting on a government bus

இளைஞர்களின் செயலால் உயிர்தப்பிய பயணிகள் | Karaikudi | Stone pelting on a government bus

இளைஞர்களின் செயலால் உயிர்தப்பிய பயணிகள் | Karaikudi | Stone pelting on a government bus | Youth escape on a two-wheeler சிவகங்கை மாவட்டம் சாக்கோட்டையை அடுத்த ஏம்பலில் இருந்து மாலை 6:30 மணிக்கு டவுன் பஸ் ஒன்று காரைக்குடி நோக்கி வந்து கொண்டிருந்தது. பர்மா காலனி பஸ் ஸ்டாப்பில் பயணிகளை இறக்கிவிட்டு 10 பயணிகளுடன் டவுன் பஸ் கிளம்பிய போது, பைக்கில் வந்த 2 இளைஞர்கள் பஸ் மீது கருங்கல்லால் தாக்கினர். பஸ்சின் பின்பக்க கண்ணாடி உடைந்து சேதமடைந்தது. பின்பக்கத்தில் பயணிகள் யாரும் இல்லாததால் யாருக்கும் காயமில்லை. அதிர்ச்சியடைந்த டிரைவர் திருச்செல்வம் பஸ்சை நிறுத்தினார். பஸ்ஸில் இருந்த பயணிகள் அலறியடித்து ஓடினர். காரைக்குடி வடக்கு போலீசார் பஸ் மீது கல்வீச்சு குறித்து விசாரிக்கின்றனர்.

ஏப் 24, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !