உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / விருதுநகர் / ஒரு பாவமும் செய்யாத பிஞ்சு... தாயின் கள்ளக்காதலன் செய்த பகீர் Crime News | Love Affair |Virudhunagar

ஒரு பாவமும் செய்யாத பிஞ்சு... தாயின் கள்ளக்காதலன் செய்த பகீர் Crime News | Love Affair |Virudhunagar

ஒரு பாவமும் செய்யாத பிஞ்சு... தாயின் கள்ளக்காதலன் செய்த பகீர் Crime News | Love Affair | Virudhunagar விருதுநகர் மாவட்டம் சிவகாசியை சேர்ந்தவர் துரைப்பாண்டி வயது 26. இவரது மனைவி ஸ்வாதி வயது 22. நான்கு வருடங்களுக்கு முன்பு இவர்களுக்கு திருமணம் நடந்தது. மூன்று வயதில் விஷ்ணு பிரியா என்ற மகள் இருந்தாள். குடும்ப பிரச்னை காரணமாக சில மாதங்களுக்கு முன்பு துரைப்பாண்டியை பிரிந்த ஸ்வாதி, தனது குழந்தையுடன் திருத்தங்கலில் தங்கி இருந்தார். அங்குள்ள பட்டாசு ஆலைக்கு வேலைக்கு போனார். அதே பட்டாசு ஆலையில் வேலை பார்த்த விக்னேஷ்வரன் என்ற 25 வயதான இளைஞருடன் ஸ்வாதிக்கு பழக்கம் ஏற்பட்டது. அவருடன் திருமணத்தை மீறிய பந்தத்தில் இருந்து வந்தார் ஸ்வாதி. நள்ளிரவு நேரங்களில் ஸ்வாதி தங்கி இருக்கும் வீட்டுக்கு வரும் விக்னேஷ்வரன், அவருடன் தனிமையில் இருப்பதை வழக்கமாக வைத்திருந்தார். நேற்று இரவும் ஸ்வாதியின் வீட்டுக்கு வந்த விக்னேஷ்வரன், 3 வயது குழந்தை விஷ்ணு பிரியாவை கொடூரமாக அடித்து கொலை செய்தான். அக்கம்பக்கத்தினர் மூலம் இந்த சம்பவம் போலீசுக்கு போனது. ஸ்பாட்டுக்கு வந்த போலீசார் சிறுமியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கொலை வழக்கு பதிவு செய்து ஸ்வாதியின் கள்ளக்காதலன் விக்னேஷ்வரனையும் கைது செய்தனர். கொலைக்கான காரணம் குறித்து அவன் திடுக்கிடும் வாக்குமூலம் கொடுத்தான். இது பற்றி போலீஸ் கூறியது: விக்னேஷ்வரனுக்கு மதுகுடிக்கும் பழக்கம் உண்டு. இரவு நேரத்தில் ஸ்வாதியின் வீட்டுக்கும் போதையில் தான் வருவானாம். கள்ளக்காதலர்கள் 2 பேரும் தனிமையில் இருக்கும் போது, சில நேரம் குழந்தை கண் விழித்து அழுதிருக்கிறது. இது விக்னேஷ்வரனுக்கு இடையூறாக இருந்திருக்கிறது. இப்படி குழந்தை அழும்போதெல்லாம், கொஞ்சம் கூட ஈவு இரக்கமே இல்லாமல் கொடூரமாக அடித்து துன்புறுத்தி இருக்கிறான். சம்பவம் நடந்த இரவில் ஸ்வாதியுடன் அவன் இருந்த போதும் குழந்தை கண் விழித்து அழுதிருக்கிறது. ஆத்திரம் அடைந்த விக்னேஷ்வரன் கொடூரனாக மாறி விட்டான். குழந்தையின் தலைமுடியை பிடுங்கி மிருகத்தனமாக நடந்தான். ஒரு கட்டத்தில் அடித்தே கொன்று விட்டான். பச்சிளம் குழந்தை என்று கூட பார்க்காமல் அரக்கனை போல நடந்து இருக்கிறான் என்று போலீசார் கூறினர்.

ஆக 02, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை