உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / விருதுநகர் / நீட் தேர்வில் சாதனை படைத்த ஏழை மாணவி பூமாரி | poor student'S MBBS dream fullfilled | Viruthunagar

நீட் தேர்வில் சாதனை படைத்த ஏழை மாணவி பூமாரி | poor student'S MBBS dream fullfilled | Viruthunagar

விருதுநகர் மாவட்டம் திருச்சுழி அருகே உள்ள புலிக்குறிச்சி கிராமத்தைச் சேர்ந்தவர் முத்துபாண்டி - பொன்னழகு தம்பதி. இவர்களுக்கு பூமாரி என்ற மகள், 2 மகன்கள் உள்ளனர். உடல் நலக்குறைவால் கடந்த ஐந்தாண்டுகளுக்கு முன்பு முத்துப்பாண்டி இறந்தார். வறுமையின் கோரப்பிடியில் சிக்கிய பொன்னழகு கூலி வேலை பார்த்து 3 குழந்தைகளை வளர்தது தாத்தா வீட்டில் வசித்து வருகிறார். திருச்சுழி சேதுபதி அரசு மேல்நிலைப்பள்ளியில் 2023 - 24ம் கல்வியாண்டில் ப்ளஸ் 2 படித்து 573 மதிப்பெண்கள் பெற்று பள்ளியில் முதலிடம் பிடித்து சாதனை படைத்தார். அவருக்கு சிறு வயதிலிருந்து மருத்துவம் படிக்க வேண்டும் என்ற ஆசை இருந்தது. ஆனால் நீட் தேர்வால் மருத்துவப் படிப்பில் சேர்வது கடினம் என பலரும் கூறினர். எனினும் கடின உழைப்பு, தன்னம்பிக்கையுடன் பூமாரி படித்தார். இதன் விளைவு நீட் தேர்வில் வெற்றி பெற்று சாதனை படைத்தார். அவருக்கு தமிழக அரசு கொண்டு வந்துள்ள 7.5% இட ஒதுக்கீட்டில் பூமாரியின் எம்பிபிஎஸ் மருத்துவப்படிப்பு கனவு நனவாகியுள்ளது.

ஆக 05, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !