உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / விருதுநகர் / கூட்டம் கூட்டமாக வந்து பார்த்து செல்லும் கிறிஸ்தவர்கள் | Virudhunagar | Crowds of Christians

கூட்டம் கூட்டமாக வந்து பார்த்து செல்லும் கிறிஸ்தவர்கள் | Virudhunagar | Crowds of Christians

ஸ்ரீவில்லிபுத்தூர் சிவகாசி ரோட்டில் பழமையான இயேசு திரு இருதய ஆலயம் உள்ளது. ஸ்ரீவில்லிபுத்தூரைச் சேர்ந்த ஜான் பிரிட்டோ என்பவர் கடந்த 2022ல் கனடாவில் இருந்து 2 அடி உயரமுள்ள இருதயம் கையில் ஏந்திய சைனா களி மண், கண்ணாடி பவுடர் கலவையில் உருவாக்கப்பட்ட மாதா சிலையை ஆலயத்திற்கு வழங்கினார். அந்த சிலை கண்ணாடி பேழைக்குள் வைத்து வழிபாடு செய்யப்பட்டு வருகிறது. இன்று காலை பெண் பக்தர் ஒருவர் மாதாவை வழிபட வந்தார். அப்போது மாதாவின் இடது கை உள்ளங்கையில் இருக்கும் இருதயத்தில் இருந்து ரத்தம் போன்ற திரவம் வழிந்தோடி கையில் படிந்திருந்ததை கண்டு ஆச்சரியப்பட்டார். இந்த தகவல் ஸ்ரீவில்லிபுத்தூர் முழுவதும் பரவியது. அதைத் தொடர்ந்து நூற்றுக்கணக்கான மக்கள் மாதா சிலையில் ரத்தம் வழிந்ததை ஆச்சரியத்துடன் பார்த்து வழிபட்டு சென்றனர்.

அக் 01, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ